இரவில் குடிக்கும் ஒரு கிளாஸ் வெந்நீர் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை தடுக்கும்

இரவில் குடிக்கும் ஒரு கிளாஸ் வெந்நீர் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை தடுக்கும்

கடுமையான குளிர் காலத்தில் ரத்த அழுத்தம் அதிகரிப்பதாலும், ரத்த நாளங்கள் சுருங்குவதாலும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. போதிய அளவு தண்ணீர் குடிக்காததால் ரத்தத்தின் அடர்த்தி அதிகரித்து இதய பாதிப்புகளை உண்டாக்குவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இரவு தூங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை அருந்துவது ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதயம் மற்றும் மூளை தொடர்பான பாதிப்புகளைக் குறைக்க உதவுகிறது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

உணவில் உப்பின் அளவை ஐந்து கிராமுக்கு கீழ் குறைப்பதோடு, புரதம் நிறைந்த எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிகாலையில் நடைப்பயிற்சி செய்வதைத் தவிர்த்து, வெயில் வந்த பிறகு உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானது. சீரான ரத்த அழுத்தப் பரிசோதனை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் இத்தகைய உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *