இரயில் இருக்கைக்காக மல்லுக்கட்டிய பெண்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
February 1, 2026

இரயில் பெட்டி ஒன்றில் இருக்கைக்காக இரு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கைகலப்பாக மாறிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. சாதாரண வாக்குவாதத்தில் தொடங்கிய இந்த சண்டை, ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கும் அளவிற்கு முற்றியது. பொது இடத்தில் நடந்த இந்த எதிர்பாராத மோதல் அங்கிருந்த சக பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தியது.
நிலைமை மோசமடைந்ததை அடுத்து, அருகிலிருந்த பயணிகள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கி விட்டனர். எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், பொது இடங்களில் இது போன்ற அநாகரீகமான செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.