இரண்டு கண்கள் வெவ்வேறு நிறம் இந்த அபூர்வ பூனை உங்களை லட்சாதிபதியாக மாற்றும்

இரண்டு கண்கள் வெவ்வேறு நிறம் இந்த அபூர்வ பூனை உங்களை லட்சாதிபதியாக மாற்றும்

மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தைச் சேர்ந்த அனுபவ் சிங் என்பவருக்கு காட்டில் ஒரு அதிசய பூனை கிடைத்துள்ளது. ‘காவோ மணி’ என்ற இந்த அரிய வகை இனத்தைச் சேர்ந்த பூனையின் ஒரு கண் நீல நிறத்திலும், மற்றொரு கண் மஞ்சள் நிறத்திலும் இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் இந்த வகை பூனைகளுக்கு பெரும் வரவேற்பு உள்ளதால், இதன் மதிப்பு சுமார் 6 முதல் 7 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் மட்டுமே காணப்படும் இந்த இனம் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த பூனைகள் மிகவும் புத்திசாலித்தனமானவை மற்றும் சுறுசுறுப்பானவை. தற்போது ‘ஹேஜி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பூனை, அனுபவ் சிங் குடும்பத்துடன் வசித்து வருகிறது. இது போன்ற அரிய பூனைகள் உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் ஒரே நாளில் லட்சாதிபதி ஆக முடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *