இபிஎஃப்ஓ ஓய்வூதியம் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டியவை இதோ

இபிஎஃப்ஓ ஓய்வூதியம் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டியவை இதோ

இபிஎஃப்ஓ விதிமுறைப்படி ஆவணங்கள் சரியாக இருந்தால் 20 நாட்களுக்குள் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். இருப்பினும், வங்கி விவரங்களில் உள்ள பிழைகள், ஆதார் மற்றும் பிறப்பு தேதியில் உள்ள முரண்பாடுகள் மற்றும் முழுமையற்ற விண்ணப்பங்கள் காரணமாகவே பல கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. நிறுவனத்தின் பங்களிப்பு மற்றும் வாரிசுதாரர் ஆவணங்களில் உள்ள குறைபாடுகளும் இதற்கு முக்கிய காரணங்களாக மத்திய அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஓய்வூதிய விண்ணப்பம் தடையின்றி அங்கீகரிக்கப்பட பயனாளிகள் தங்கள் யுஏஎன் (UAN) கணக்கில் ஆதார் மற்றும் வங்கி விவரங்களை உடனுக்குடன் புதுப்பிக்க வேண்டும். தற்போது இ-நாமினேஷன் மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பம் மூலம் இந்த நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. ஆவணங்களை முன்கூட்டியே சரிபார்ப்பது ஓய்வூதியத்தை விரைவாகப் பெற உதவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *