இந்திய வடகிழக்கு மாநிலங்களை பிரிக்க சதி செய்த வங்கதேசத்திற்கு ஹிமந்த பிஸ்வா சர்மா கடும் எச்சரிக்கை
December 17, 2025

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பிரித்து வங்கதேசத்துடன் இணைக்க நடக்கும் சதி குறித்து அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம் மற்றும் அணுசக்தி நாடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேசத் தலைவர் ஹஸ்னத் அப்துல்லாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்த சர்மா, இந்தியாவின் ‘சிக்கன்ஸ் நெக்’ பகுதியை அச்சுறுத்துபவர்கள், வங்கதேசத்தின் பலவீனமான பகுதிகளை எண்ணிப் பார்க்க வேண்டும் என்றார். இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்று அவர் உறுதியளித்தார்.