இந்திய ராணுவத்தில் மாபெரும் அதிரடி 79 ஆயிரம் கோடி ரூபாய் பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல்

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (டிஏசி) கூட்டத்தில், முப்படைகளின் வலிமையை அதிகரிக்க 79,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த முக்கிய முடிவின் மூலம் பினாகா ராக்கெட் அமைப்பிற்கான நீண்ட தூர வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் மற்றும் எதிரி ட்ரோன்களை கண்டறியும் நவீன அமைப்புகள் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளன. இது இந்திய ராணுவத்தின் செயல்பாட்டு திறனை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.
விமானப் படையின் பலத்தை அதிகரிக்க 200 கிமீ தூரம் பாயும் ‘அஸ்ட்ரா மார்க்-2’ ஏவுகணைகள் வாங்கப்பட உள்ளன. மேலும், டி-90 டாங்கிகள் மற்றும் எம்ஐ-17 ஹெலிகாப்டர்களை நவீனமயமாக்கவும் டிஏசி பச்சைக்கொடி காட்டியுள்ளது. எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட நடுத்தர தூர ஏவுகணைகள் (MR-SAM) இணைக்கப்படுவதால், இந்தியாவின் வான்வழி மற்றும் கடல்சார் பாதுகாப்பு இனி கூடுதல் கவசத்தைப் பெறும்.