இந்தியாவுக்கு எதிராக விளையாட மறுக்கும் பாகிஸ்தான் ஐசிசி கடும் நடவடிக்கை எடுக்குமா
February 2, 2026

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாடப் போவதில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுவரை ஐசிசிக்கு எந்தவொரு எழுத்துப்பூர்வமான அல்லது அதிகாரப்பூர்வமான தகவலையும் வழங்கவில்லை. பிசிபி தனது நிலைப்பாட்டை முறைப்படி தெளிவுபடுத்திய பின்னரே ஐசிசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கும்.
குரூப் ‘ஏ’ பிரிவில் இந்தியாவுடன் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாட வேண்டியுள்ளது. பிசிபியின் இந்த முடிவால் ஐசிசி அபராதம் அல்லது தடை விதிக்குமா என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.