இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பிரிக்க சதியா பரப்பரப்பை கிளப்பும் ட்ரம்ப்லேண்ட் வரைபடம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பிரிக்க சதியா பரப்பரப்பை கிளப்பும் ட்ரம்ப்லேண்ட் வரைபடம்

பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணுன் வெளியிட்டுள்ள புதிய வரைபடம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ட்ரம்ப்லேண்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வரைபடத்தில் அஸ்ஸாம், மேகாலயா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கி ஒரு தனி நாட்டை உருவாக்க பண்ணுன் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதியாக அவர் காட்டியிருப்பது இந்தியாவின் பாதுகாப்பு வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வடகிழக்கு மாநிலங்களை பிரிக்க வெளிநாட்டு சதி நடப்பதாக ஷேக் ஹசீனா முன்னர் கூறிய புகார்களை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளது.

அதே சமயம் வங்கதேச எல்லை மற்றும் மியான்மரின் ரக்கைன் பகுதிகளில் ரோஹிங்கியா பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது இந்தியாவின் கவலையை அதிகரித்துள்ளது. அங்குள்ள காடுகளில் ஆயுதப் பயிற்சி மற்றும் ராணுவ உடைகள் பிடிபட்ட சம்பவங்கள் பெரும் சதித்திட்டத்தை சுட்டிக்காட்டுகின்றன. முகமது யூனுஸ் அரசின் ‘மனிதநேய வழித்தட’ திட்டம் இந்த பிரிவினைவாத சக்திகளுக்கு உதவும் ஒரு முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *