ஆயுர்வேத மருத்துவத்திற்கு பட்ஜெட்டில் மெகா முக்கியத்துவம் வரப்போகிறது மூன்று புதிய நிறுவனங்கள்

ஆயுர்வேத மருத்துவத்திற்கு பட்ஜெட்டில் மெகா முக்கியத்துவம் வரப்போகிறது மூன்று புதிய நிறுவனங்கள்

இந்தியாவின் பழங்கால மருத்துவ முறைக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சுகாதாரத் துறையில் ஆயுர்வேதத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், நாடு முழுவதும் மூன்று புதிய ‘அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்கள்’ அமைக்கப்பட உள்ளன. நவீன மருத்துவத்துடன் வேத கால இந்திய சிகிச்சை முறைகளையும் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவை உலகளாவிய ‘மருத்துவ மதிப்பு சுற்றுலா மையமாக’ மாற்ற அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. பாரம்பரிய சிகிச்சை முறைகளை உலக நாடுகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முயற்சி நாட்டின் சுகாதார கட்டமைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *