ஆயுதம் ஏந்தாமல் அமெரிக்காவை வீழ்த்தத் தயாராகும் சீனாவின் புதிய தொழில்நுட்ப வியூகம்

ஆயுதம் ஏந்தாமல் அமெரிக்காவை வீழ்த்தத் தயாராகும் சீனாவின் புதிய தொழில்நுட்ப வியூகம்

உலக நாடுகளின் கவனம் இஸ்ரேல் மற்றும் ஈரான் போரின் மீது இருக்கும் வேளையில், சீனா தனது 15-வது ஐந்தாண்டு திட்டத்திற்கான 141 பக்க ரகசிய ஆவணத்தை வெளியிட்டுள்ளது. இந்த அதிரடித் திட்டம் வெறும் பொருளாதாரக் கொள்கை மட்டுமல்ல, அமெரிக்காவைத் தொழில்நுட்ப ரீதியாக முறியடிக்கும் ஒரு போர் தந்திரமாகப் பார்க்கப்படுகிறது. இதில் செயற்கை நுண்ணறிவு, மனித உருவ ரோபோக்கள் மற்றும் விண்வெளி குவாண்டம் தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரோபோக்கள் உற்பத்தியை இருமடங்காக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த வியூகம் சுமார் 1.4 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள ஏஐ சந்தையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எஃப்-35 போர் விமானங்கள் முதல் மின்சார வாகனங்கள் வரை அனைத்திற்கும் தேவையான ‘ரேர் எர்த் மெட்டல்’ வளங்களை ஏற்கனவே சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதன் மூலம் ராணுவ பலத்தைப் பயன்படுத்தாமலேயே, தொழில்நுட்பம் மற்றும் கனிம வளங்களை ஆயுதமாக மாற்றி அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்திற்குச் சீனா முடிவு கட்டத் திட்டமிட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *