ஆந்திராவில் நச்சுப் பால் குடித்த 14 பேர் பலி மற்றும் பலரது நிலைமை கவலைக்கிடம்
March 14, 2026

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நச்சுப் பால் குடித்ததால் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. பாலில் கலக்கப்பட்ட ‘எத்திலீன் கிளைக்கால்’ என்ற கொடிய ரசாயனம் மக்களின் சிறுநீரகங்களைச் செயலிழக்கச் செய்ததே இந்தத் துயரத்திற்குப் பிரதான காரணமாகும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிகிச்சையில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 6 பேர் டயாலிசிஸ் சிகிச்சையில் உயிருக்குப் போராடி வரும் நிலையில், ஐதராபாத் மருத்துவக் குழுவினர் விரைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் லாப நோக்கில் ரசாயனம் கலந்த பால் வியாபாரி கணேஸ்வர ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.