அமைதி ஒப்பந்தத்தில் 90 சதவீத உடன்பாடு எட்டிய டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி

அமைதி ஒப்பந்தத்தில் 90 சதவீத உடன்பாடு எட்டிய டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இடையே புளோரிடாவில் நடந்த சந்திப்பில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 20 அம்ச அமைதித் திட்டத்தில் 90 சதவீத உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு உத்தரவாதத்தில் முழுமையான உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். ரஷ்ய அதிபர் புதினுடன் இரண்டரை மணி நேரம் தொலைபேசியில் பேசிய டிரம்ப், புதின் அமைதியை விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

அடுத்த சில வாரங்களில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்த டிரம்ப், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் நீடிக்கும் என்றும் எச்சரித்தார். உக்ரைனின் எரிசக்தி மற்றும் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் புதின் தாராளமாக இருப்பதாக டிரம்ப் கூறினார். சரியான நேரத்தில் புதின் மற்றும் ஜெலென்ஸ்கி பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிக மோசமான போரை முடிவுக்குக் கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *