அமெரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றது வெனிசுவேலா

அமெரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றது வெனிசுவேலா

மியாமியில் நடைபெற்ற விறுவிறுப்பான உலக பேஸ்பால் கிளாசிக் இறுதிப் போட்டியில், நட்சத்திர வீரர்கள் நிறைந்த அமெரிக்க அணியை 2-3 என்ற கணக்கில் வீழ்த்தி வெனிசுவேலா முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அரசியல் ரீதியாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவும் சூழலில், அமெரிக்க மண்ணிலேயே அந்நாட்டை வீழ்த்தி வெனிசுவேலா படைத்த இந்த வரலாற்று வெற்றி விளையாட்டு உலகில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மார்ச் 18ஆம் தேதி வெனிசுவேலாவில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2028 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற ஆறு அணிகளில் ஒன்றாக வெனிசுவேலா இணைந்து சாதனை படைத்துள்ளது. மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் வெனிசுவேலா தேசியக் கொடியை ஏந்தி உணர்ச்சிப்பூர்வமாக இந்த வரலாற்றுத் தருணத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *