அமெரிக்காவுடன் மோதும் இந்தியா! மும்பையில் தொடங்கும் டி20 உலகக்கோப்பை திருவிழா – ஆடும் லெவன் இதோ!

அமெரிக்காவுடன் மோதும் இந்தியா! மும்பையில் தொடங்கும் டி20 உலகக்கோப்பை திருவிழா – ஆடும் லெவன் இதோ!

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது இந்தியா. பாகிஸ்தானை வீழ்த்திய அமெரிக்காவை சாதாரணமாக எடைபோட முடியாது என கேப்டன் சூர்யகுமார் யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்குவது உறுதியாகியுள்ள நிலையில், வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் காண உள்ளது.

இதற்கு முன்னதாக, பாட்ஷா மற்றும் நோரா ஃபதேஹியின் கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்ட தொடக்க விழா நடைபெற உள்ளது. ரோஹித் சர்மா மற்றும் ஜெய் ஷா உலகக்கோப்பையை மைதானத்திற்குள் கொண்டு வர உள்ளனர். வலுவான பேட்டிங் வரிசையுடன், பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலைமையிலான பந்துவீச்சு கூட்டணி அமெரிக்காவிற்கு நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *