அமெரிக்கப் படையினர் படுகொலை: பதிலடிக்கு டிரம்ப் உறுதி! ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிராக ஆக்ரோஷமான எச்சரிக்கை

அமெரிக்கப் படையினர் படுகொலை: பதிலடிக்கு டிரம்ப் உறுதி! ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிராக ஆக்ரோஷமான எச்சரிக்கை

சிரியாவின் பழமை வாய்ந்த பால்மைரா நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) பயங்கரவாதிகளின் தாக்குதலில் இரண்டு அமெரிக்கப் படையினர் மற்றும் ஒரு அமெரிக்கக் குடிமகன் கொல்லப்பட்டனர். மேலும், இந்தத் தாக்குதலில் மூன்று வீரர்கள் காயமடைந்தனர். ஐ.எஸ்-க்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றபோதே அமெரிக்கப் படையினர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவ இடத்திலேயே சி.ஐ. பாதுகாப்புப் படையினர் உடனடியாக தாக்குதல் நடத்தியவரை சுட்டுக் கொன்றனர்.

இந்தச் சம்பவத்தால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். “சிரியாவில் உயிரிழந்த மூன்று தேசபக்தர்களுக்காக நாங்கள் வருந்துகிறோம். இது அமெரிக்கா மீதான தாக்குதல் மட்டுமல்ல, சிரியா மீதான தாக்குதலும் கூட,” என்று அவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதலுக்குக் கடுமையான பழிவாங்கப்படும் என்றும், குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *