அட்லாண்டிக் பெருங்கடலில் 5500 மைல் தூரத்திற்கு பரவி கிடக்கும் ராட்சத பாசிப்படலம் விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை

அட்லாண்டிக் பெருங்கடலில் 5500 மைல் தூரத்திற்கு பரவி கிடக்கும் ராட்சத பாசிப்படலம் விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை

அட்லாண்டிக் பெருங்கடலில் ‘கிரேட் சர்காசம் பெல்ட்’ எனப்படும் பிரம்மாண்ட கடல்பாசிப் படலம் அதிவேகமாகப் பரவி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். விண்வெளியில் இருந்து பார்க்கும்போது பழுப்பு நிறப் பாம்பு போலத் தோன்றும் இந்தப் பாசிப் படலம், ஆப்பிரிக்கக் கடற்கரையிலிருந்து மெக்சிகோ வளைகுடா வரை சுமார் 5,500 மைல்கள் நீளத்திற்குப் பரவியுள்ளது. 2011 ஆம் ஆண்டு முதன்முதலில் கண்டறியப்பட்ட இதன் வளர்ச்சி, தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.

விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் அமேசான் நதி வழியாகக் கடலில் கலப்பதே இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் சுமார் 3.75 கோடி மெட்ரிக் டன் பாசிகள் கடலில் மிதப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பாசிகள் கடற்கரையை அடையும்போது நச்சு வாயுக்களை வெளியிட்டு, கடல்வாழ் உயிரினங்களுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *