₹3 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக தந்தையை பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை! மகன்கள் கைது
December 20, 2025

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையில் ₹3 கோடி இன்சூரன்ஸ் பணத்தைப் பெறுவதற்காக, தந்தையை பாம்பைக் கடிக்க வைத்து கொலை செய்த இரு மகன்கள் கைது செய்யப்பட்டனர். முதலில் நல்லபாம்பை ஏவி தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது முறை கட்டுவிரியன் பாம்பை விட்டு தூங்கிக்கொண்டிருந்த தந்தையைக் கடிக்க வைத்து அவர்கள் கொன்றுள்ளனர்.
காப்பீட்டு நிறுவனத்தின் சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தியதில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியானது. மகன்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்து என ஜோடிக்க முயன்ற இந்த கொடூரக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.