ஹிஜாப் சர்ச்சையில் முதல்வர் நிதிஷ்குமாருக்கு ஆதரவாக கிரிராஜ் சிங் கருத்து

ஹிஜாப் சர்ச்சையில் முதல்வர் நிதிஷ்குமாருக்கு ஆதரவாக கிரிராஜ் சிங் கருத்து

பாட்னாவில் பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் பெண் மருத்துவரின் ஹிஜாப்பை முதல்வர் நிதிஷ்குமார் இழுத்த விவகாரம் பெரும் அரசியலை கிளப்பியுள்ளது. ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் முதல்வருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அரசு நடைமுறைகளின் போது அடையாளம் காண முகம் காட்டுவதில் தவறில்லை என்று அவர் வாதிட்டார்.

ஜேடியூ அமைச்சர் ஜமா கான் இது முதல்வரின் தந்தைவழி அன்பு என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் உபி அமைச்சர் சஞ்சய் நிஷாத்தும் நிதிஷ்குமாருக்கு ஆதரவாக பேசியுள்ளார். இருப்பினும், சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோ முதல்வரின் நடத்தை குறித்த விவாதங்களை நாடு முழுவதும் தீவிரப்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *