ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் 16 படகுகளை அமெரிக்கா அதிரடியாக அழித்தது

உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை வைக்க முயன்றதாக ஈரானின் 16 படகுகளை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளன. இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ள அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு, துறைமுகத்தில் இருந்த படகுகள் மீதான தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக நிலவி வரும் பதற்றத்தால் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, உலகளவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர், தற்போது ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகள் ஏதுமில்லை என்றும், வர்த்தகப் பாதையைப் பாதுகாக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். முன்னதாக, எண்ணெய் கப்பல்களை அனுமதிக்க மாட்டோம் என ஈரான் எச்சரித்திருந்தது. இந்த மோதலால் பாரசீக வளைகுடா பகுதியில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.