ஷாப்பிங் மாலில் காதலியுடன் ரொமான்ஸ்: திடீரென என்ட்ரி கொடுத்த மனைவி! அடுத்து நடந்தது அதிரடி…

ஷாப்பிங் மாலில் காதலியுடன் ரொமான்ஸ்: திடீரென என்ட்ரி கொடுத்த மனைவி! அடுத்து நடந்தது அதிரடி…

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ராவில் உள்ள ஒரு பிரபல ஷாப்பிங் மாலில், காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதலிக்கு பரிசு வாங்க வந்த கணவனுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கு எதிர்பாராத விதமாக வந்த மனைவி, தனது கணவன் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதைக் கண்டு ஆவேசமடைந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனின் காதலியுடன் நடுரோட்டில் சண்டையிடத் தொடங்கினார். இரு பெண்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கும் அளவுக்கு முற்றியது. சுமார் 15 நிமிடம் நீடித்த இந்த மோதலால் ஷாப்பிங் மாலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை மோசமாவதைக் கண்ட கணவன் அங்கிருந்து நைசாக நழுவித் தப்பியோடினார்.

மால் ஊழியர்கள் எவ்வளவோ முயற்சித்தும் சண்டையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இறுதியில் போலீஸார் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். இந்த “தர்ம அடி” வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *