வேலையில்லாத முஸ்லீம் இளைஞரை காதலித்த மகள் அர்ஷத் வார்சியின் திருமணத்திற்கு மாமனார் மாமியார் பயந்தது ஏன்

வேலையில்லாத முஸ்லீம் இளைஞரை காதலித்த மகள் அர்ஷத் வார்சியின் திருமணத்திற்கு மாமனார் மாமியார் பயந்தது ஏன்

பாலிவுட் நடிகர் அர்ஷத் வார்சி தனது திருமண வாழ்க்கையின் ஆரம்பகால சவால்கள் குறித்து மனம் திறந்துள்ளார். தனது மனைவி மரியா கோரெட்டியின் கத்தோலிக்க பெற்றோர் இந்த திருமணத்திற்கு முதலில் மிகவும் தயங்கியதாக அவர் கூறினார். மரியா ஒரு கத்தோலிக்க இளைஞரை திருமணம் செய்து கொண்டு நிலையான வேலையில் இருப்பார் என்று அவர்கள் எதிர்பார்த்த நிலையில் ஒரு வேலையில்லாத முஸ்லீம் இளைஞரை மரியா காதலித்தது அவர்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

ஆரம்பத்தில் மதம் மற்றும் வேலை தொடர்பாக கவலைகள் இருந்தபோதிலும் அர்ஷத்தின் நற்பண்புகள் மரியாவுடைய பெற்றோரின் நம்பிக்கையை வென்றன. அவர் தனது மகளை நன்றாக கவனித்துக் கொள்வார் என்ற உறுதி அவர்களுக்கு கிடைத்ததும் அந்த பயம் அன்பாக மாறியது. தற்போது அர்ஷத்தின் மாமனார் மற்றும் மாமியார் அவருடனேயே வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் இந்த அழகான உறவு பலருக்கும் முன்மாதிரியாக உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *