“வேற எதுவும் கேக்க மாட்டிங்களா?” – முதல்வர் பதவி விவகாரத்தில் செய்தியாளர்களை கடிந்துகொண்ட சித்தராமையா!

“வேற எதுவும் கேக்க மாட்டிங்களா?” – முதல்வர் பதவி விவகாரத்தில் செய்தியாளர்களை கடிந்துகொண்ட சித்தராமையா!

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று செய்தியாளர்களிடம் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் ‘அதிகாரப் பகிர்வு’ குறித்த தொடர்ச்சியான கேள்விகளால் ஆத்திரமடைந்த அவர், “உங்களுக்கு வேறு எதுவும் கேட்கத் தெரியாதா? கடந்த மூன்று மாதங்களாக இதையே கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இனிமேல் இதைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்,” என்று காட்டமாகப் பதிலளித்தார்.

முதல்வர் மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகிய இருவருக்கும் இடையே முதல்வர் பதவி இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றப்படுமா என்ற விவாதம் மே 20, 2023-இல் அரசு அமைந்ததிலிருந்தே நீடிக்கிறது. வரும் நவம்பர் 20, 2025-இல் ஆட்சியின் பாதி காலம் நிறைவடைய உள்ள நிலையில், இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

இது குறித்து மேலும் பேசிய சித்தராமையா, “நானும் டி.கே. சிவகுமாரும் காங்கிரஸ் மேலிடத்தின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர்கள். மேலிடம் என்ன சொல்கிறதோ அதை நாங்கள் செய்வோம். இதை எத்தனை முறை சொல்வது? யாராவது இது குறித்துப் பேசினால், அவர்களிடம் போய் கேளுங்கள்,” என்று எரிச்சலுடன் கூறினார்.

டி.கே. சிவகுமாரின் சமீபத்திய கருத்து குறித்த கேள்விக்கு, “அவர் ஏதாவது சொல்லியிருந்தால் அவரிடமே விளக்கம் கேளுங்கள். எனக்கு அது பற்றித் தெரியாது. நான் மேலிடத்தின் உத்தரவைப் பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறேன்,” என்று கூறி பேட்டியை முடித்துக்கொண்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *