வெளிநாட்டில் பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு நேர்ந்த அவமானம் ஹோட்டல் கட்டணம் செலுத்தாததால் நடுத்தெருவில் நின்ற வீரர்கள்

வெளிநாட்டில் பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு நேர்ந்த அவமானம் ஹோட்டல் கட்டணம் செலுத்தாததால் நடுத்தெருவில் நின்ற வீரர்கள்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எஃப்.ஐ.எச் புரோ லீக் தொடரில் பங்கேற்கச் சென்ற பாகிஸ்தான் தேசிய ஹாக்கி அணி கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு சரியான நேரத்தில் ஹோட்டல் கட்டணத்தை செலுத்தத் தவறியதால், கான்பெராவில் வீரர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட அறைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் நள்ளிரவில் வீரர்கள் வீதியில் தங்கும் அவலநிலை ஏற்பட்டது.

உள்ளூர் பாகிஸ்தானியர்களின் உதவியுடன் தங்குவதற்கு இடம் கிடைத்தாலும், ஒரு சிறிய அறையில் பல வீரர்கள் நெருக்கடியாகத் தங்க வேண்டியிருந்தது. இந்த மன உளைச்சலால் ஆஸ்திரேலியாவிடம் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியது. முன்னதாக அர்ஜென்டினாவிலும் இதேபோன்ற இக்கட்டான சூழலை அந்த அணி எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *