வெறும் 1499 ரூபாயில் விமான பயணம், சாமானிய மக்களின் கனவை நனவாக்கும் டாடா குரூப்

செய்தி பிரிவு : விமானத்தில் செல்வது என்பது இன்னும் பலருக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. மக்களின் இந்த சுமையை குறைக்கும் வகையில் டாடா குழுமத்தின் ஏர் இந்தியா அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் சாதாரண மக்களும் மிகக் குறைந்த செலவில் விமானப் பயணம் மேற்கொள்ள முடியும். இந்த விலை குறைப்பு நடுத்தர வர்க்கத்தினருக்கு பேருந்து அல்லது இரயில் பயணக் கட்டணத்திலேயே விமானத்தில் செல்லும் வாய்ப்பை வழங்குகிறது, இது நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும்.
இந்த சிறப்பு சலுகையின் கீழ் உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் 1499 ரூபாயில் இருந்து தொடங்குகின்றன. சர்வதேச பயணங்களுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிப்ரவரி 5-ம் தேதிக்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு ஒருமுறை இலவசமாக பயணத் தேதியை மாற்றும் வசதியும் உண்டு. ஏர் இந்தியா செயலி மூலம் முன்பதிவு செய்யும்போது கூடுதல் கேஷ்பேக் சலுகைகளும் கிடைக்கிறது. எனவே, குறைந்த செலவில் பயணிக்க விரும்புவோர் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.