விவாகரத்திற்கு முன் கணவரிடம் குழந்தை கேட்ட மனைவி நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் பரபரப்பு

மகாராஷ்டிராவின் நாந்தேடு குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வந்த மருத்துவர் தம்பதியினர் இடையே ஒரு விசித்திரமான கோரிக்கை எழுந்துள்ளது. பிரிய முடிவெடுத்த நிலையில், தனது முதல் குழந்தைக்கு ஒரு துணை வேண்டும் என்பதற்காக கணவர் மூலம் மீண்டும் கருத்தரிக்க மனைவி அனுமதி கோரினார். விவாகரத்திற்கு இதுவே தனது நிபந்தனை என அவர் கூறியதைக் கேட்டு நீதிமன்றமே ஒரு நிமிடம் திகைப்பில் ஆழ்ந்தது.
பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த நீதிமன்றம், ஐவிஎஃப் (IVF) தொழில்நுட்பம் மூலம் அவர் மீண்டும் தாயாக அனுமதி வழங்கியது. இதற்கான மருத்துவச் செலவுகளை அந்தப் பெண்ணே ஏற்றுக்கொள்வார் என்றும், பிறக்கப்போகும் குழந்தையின் வளர்ப்புச் செலவிற்கும் கணவரிடம் உரிமை கோர மாட்டார் என்றும் உறுதியளித்துள்ளார். பிரிவின் விளிம்பிலும் ஒரு தாய் தனது குழந்தைக்காக எடுத்த இந்த முடிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.