விவசாயிகளின் வங்கி கணக்கில் மார்ச் 13 ஆம் தேதி டெபாசிட் ஆகும் பிஎம் கிசான் நிதி
March 11, 2026

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 22வது தவணைத் தொகை வரும் மார்ச் 13 ஆம் தேதி விடுவிக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள சுமார் 10 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக 2,000 ரூபாய் வரவு வைக்கப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிதியுதவி குறித்த தகவலை பிஎம் கிசான் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. விவசாயிகள் தங்களின் நிலையை அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு எண் மற்றும் ஓடிபி மூலம் சரிபார்க்கலாம். ஹோலி பண்டிகைக்கு முன்னதாகவே இந்தத் தொகை வழங்கப்படுவது விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.