விழுப்புரம் சட்டமன்ற தேர்தல் 2026 மாவட்ட ஆட்சியரின் அதிரடி வியூகம்

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் செஞ்சி, மயிலம் உட்பட 7 தொகுதிகளில் உள்ள 2,166 வாக்குச்சாவடி மையங்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பழுதடைந்த கட்டடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளை புதிய அரசு கட்டடங்களுக்கு மாற்றவும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.
தேர்தல் பிரச்சார செலவினங்களுக்கான விலை நிர்ணயம் மற்றும் பொதுக்கூட்ட இடங்கள் குறித்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 5,000 பேருக்கு மேல் கூடும் இடங்களை பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். தேர்தலுக்கான இந்த அதிரடி முன்னேற்பாடுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.