விளையாட்டுத் துறையில் புரட்சி படைக்க நிர்மலா சீதாராமன் அதிரடி

மத்திய பட்ஜெட் 2026-ல் இந்திய விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக ‘கேலோ இந்தியா மிஷன்’ திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தடகளப் போட்டிகளை மேம்படுத்தவும் இந்தியாவை உலகளாவிய விளையாட்டு மையமாக மாற்றவும் ரூ.10,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி நிதியை அவர் முன்மொழிந்துள்ளார். இந்தத் திட்டம் நாட்டின் விளையாட்டு உள்கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உயர்தர விளையாட்டு உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் விளையாட்டு சார்ந்த ஸ்டார்ட்அப்களுக்கு சலுகைகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வீரர்களின் நிதிச்சுமை குறைக்கப்பட்டு அவர்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். இந்த முன்னெடுப்புகள் இந்திய விளையாட்டு வீரர்களை சர்வதேச அரங்கில் புதிய சாதனைகளை படைக்க வழிவகுக்கும்.