விருத்தாச்சலத்தில் பிரேமலதாவுக்கு வழிவிடுகிறதா திமுக காங்கிரஸ்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியம்

விருத்தாச்சலத்தில் பிரேமலதாவுக்கு வழிவிடுகிறதா திமுக காங்கிரஸ்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியம்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு, அக்கட்சியின் கோட்டையாக கருதப்படும் விருத்தாச்சலம் தொகுதியை ஒதுக்க முதல்வர் ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேப்டன் விஜயகாந்த் முதன்முதலில் வென்ற இந்தத் தொகுதியை மீண்டும் கைப்பற்ற பிரேமலதா விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதால், தேமுதிக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

தற்போது இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ-வாக இருக்கும் நிலையில், அந்தத் தொகுதியை தேமுதிகவுக்கு விட்டுக்கொடுக்க திமுக முன்வந்திருப்பது கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிட்டிங் தொகுதியை இழப்பது காங்கிரஸ்க்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், வன்னியர் வாக்குகள் மற்றும் திமுகவின் பலத்துடன் விருத்தாச்சலத்தில் எளிதாக வெற்றி பெறலாம் என பிரேமலதா கணக்கு போடுகிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *