வளைகுடா நாடுகளின் வங்கிகளை குறிவைக்கும் ஈரான் போர் பதற்றத்தால் அதிரும் சர்வதேச நிதி மையங்கள்

வளைகுடா நாடுகளின் வங்கிகளை குறிவைக்கும் ஈரான் போர் பதற்றத்தால் அதிரும் சர்வதேச நிதி மையங்கள்

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வங்கி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இதற்குப் பழிவாங்க வளைகுடா நாடுகளின் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

இந்த அறிவிப்பால் துபாய், சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் அமைந்துள்ள இப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானின் இந்த அதிரடி முடிவு வளைகுடா நாடுகளின் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *