லெபனான் வானில் இஸ்ரேல் தூவிய மர்ம கியூஆர் கோட் நோட்டீஸ்
March 14, 2026

பெய்ரூட் வான்பரப்பில் இஸ்ரேலிய விமானங்கள் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை வீசியுள்ளன. இதில் உள்ள கியூஆர் கோடுகள் மூலம் லெபனான் மக்களை உளவாளிகளாக மாற்ற இஸ்ரேல் முயற்சிப்பதாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பு கருதி இந்த கோடுகளை ஸ்கேன் செய்ய வேண்டாம் என லெபனான் ராணுவம் தனது குடிமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் 15-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு நாடுகளும் மாறி மாறித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. பதற்றமான சூழலிலும், இந்தியாவிற்குச் சொந்தமான இரண்டு எல்பிஜி கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது இந்தியாவிற்கு நிம்மதியைத் தந்துள்ளது.