லெபனானில் போர் உக்கிரம் 8 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்
March 11, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் லெபனானில் இதுவரை 7.80 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தீவிர தாக்குதல் காரணமாக இந்த இடப்பெயர்வு ஏற்பட்டுள்ளது. இவர்களில் சுமார் 1.20 லட்சம் பேர் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் ஹனீன் சையத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ் மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகளிலிருந்து நிவாரண உதவிகள் வரத் தொடங்கியுள்ளன. கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்க படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் இந்த மோதலால் லெபனானில் மனிதாபிமான நெருக்கடி அதிகரித்துள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.