லூதியானா ஹோட்டலில் காதலி கொடூர கொலை; அதிர்ச்சி திருப்பம்

லூதியானாவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், காவல்துறையினர் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளனர். விசாரணையில், உயிரிழந்த பெண்ணின் காதலன் அமித் நிஷாத்தான் இந்தக் கொலையை செய்ததாக தெரியவந்துள்ளது. அமித்தும், உயிரிழந்த ரேகாவும் சேர்ந்துதான் ஹோட்டலுக்கு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. திருமணம் தொடர்பான வாக்குவாதம் முற்றியதால், இந்த சந்திப்பு பயங்கர முடிவை எட்டியுள்ளது.
ரேகா நீண்ட நாட்களாக அமித்தை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததாகவும், ஆனால் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று உடலுறவுக்குப் பிறகு, இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் ரேகா கத்தரிக்கோலால் அமித்தின் அந்தரங்க உறுப்பை காயப்படுத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து கோபமடைந்த அமித், பழிவாங்கும் நோக்கில் ரேகாவின் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி ஹோட்டலிலிருந்து மீட்கப்பட்டுள்ளது, மேலும் பலத்த காயமடைந்த அமித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.