ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் மிரட்டுகிறதா அமெரிக்கா? பகீர் கிளப்பும் மாஸ்கோ!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் மிரட்டுகிறதா அமெரிக்கா? பகீர் கிளப்பும் மாஸ்கோ!

மாஸ்கோ: எரிபொருள் வர்த்தகம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைத் தடுப்பதற்காக, இந்தியா உள்ளிட்ட நாடுகளை வாஷிங்டன் மிரட்டி வருவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய லாவ்ரோவ், “தடைகள், அதிகப்படியான வரி மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளைக் காட்டி இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா அச்சுறுத்துகிறது. ரஷ்யாவின் மலிவு விலை எரிபொருளைப் புறக்கணித்துவிட்டு, அதிக விலை கொண்ட அமெரிக்காவின் எல்.என்.ஜி (LNG) எரிபொருளை வாங்க அந்த நாடுகள் வற்புறுத்தப்படுகின்றன,” என்று சாடினார்.

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் ஆலோசனைகளை ரஷ்யா பரிசீலித்த போதிலும், யதார்த்த நிலை அதற்கு நேர்மாறாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். சர்வதேச கடல்சார் சட்டங்களை மீறி, ரஷ்ய எண்ணெய் டாங்கர்கள் மீது அமெரிக்கா மறைமுகப் போர் தொடுத்து வருவதாகவும், இது உலக நாடுகளின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் லாவ்ரோவ் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *