யோகி ஆதித்யநாத் தொகுதியில் அதிர்ச்சி! அல்ட்ராசவுண்ட் சாக்கில் பெண்ணை நிர்வாணப்படுத்த முயன்ற மருத்துவர்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டமான கோரக்பூரில் உள்ள மாவட்ட மகளிர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் நடந்ததாகக் கூறப்படுகிறது. அல்ட்ராசவுண்ட் பரிசோதனைக்கு முழுமையாக ஆடைகளைக் கழற்றுமாறு மருத்துவர் கட்டாயப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். எதிர்ப்பு தெரிவித்தபோது அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு, மிரட்டி திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் வெளியானதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில், அபிமன்யு குப்தா என்ற மருத்துவர் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மருத்துவமனை நிர்வாகம் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளதுடன், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.