யுவசக்தி திட்டத்தில் மாதம் 1500 ரூபாய் பெற தகுதியற்றவர்கள் யார் தெரியுமா

யுவசக்தி திட்டத்தின் கீழ் மாதம் 1500 ரூபாய் உதவித்தொகை பெற விண்ணப்பதாரர்கள் 21 முதல் 40 வயதுடையவராக இருக்க வேண்டும். ஏற்கனவே அரசு அல்லது தனியார் துறையில் பணியில் இருப்பவர்கள் மற்றும் பிற அரசு நலத்திட்டங்களின் கீழ் நிதியுதவி பெறுபவர்கள் இந்த உதவித்தொகைக்கு தகுதியற்றவர்கள் ஆவர். இருப்பினும், விவேகானந்தா அல்லது ஐக்கியஸ்ரீ போன்ற கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் இத்திட்டத்திற்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப செயல்முறையை எளிதாக்க மார்ச் 15 முதல் 26 வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 294 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆஃப்லைன் முறையில் பதிவு செய்யலாம். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு இந்த நிதியுதவியைப் பெறுவார்கள். வேலை கிடைக்காத பட்சத்தில் இந்த உதவித்தொகையை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.