யுபிஎஸ்சி வெற்றியாளர்களுக்குப் பாராட்டு: ‘நாட்டைப் போலவே வீட்டையும் கவனியுங்கள்’ என முதல்வர் அறிவுரை

யுபிஎஸ்சி வெற்றியாளர்களுக்குப் பாராட்டு: ‘நாட்டைப் போலவே வீட்டையும் கவனியுங்கள்’ என முதல்வர் அறிவுரை

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் (UPSC) வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு விக்டோரியா பொது அரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். பணியில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், குடும்பத்தினரிடமும் பெற்றோரிடமும் அன்பு காட்டி அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என அவர் நெகிழ்ச்சியுடன் அறிவுறுத்தினார்.

இம்முறை தமிழகத்திலிருந்து தேர்வானவர்களில் 56 பேர் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அகில இந்திய அளவில் 2-ஆம் இடம் பிடித்த ராஜேஸ்வரி உள்ளிட்ட வெற்றியாளர்களைப் பாராட்டிய முதல்வர், அதிகாரிகள் அதிகாரத் தோரணை இன்றி சமூக நீதிப் பார்வையுடன் எளிய மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *