மோடி குறித்த டிரம்ப்பின் சர்ச்சை பேச்சு உலகளவில் பெரும் பரபரப்பு

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட ஒரு கருத்து சர்வதேச அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் ஒரு வீடியோவில், மோடியின் அரசியல் வாழ்க்கையை தாம் பாழாக்க விரும்பவில்லை என்று டிரம்ப் கூறியுள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து வரும் வேளையில், டிரம்ப்பின் இந்த பேச்சு மோடி அரசுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் விரைந்து விளக்கம் அளித்துள்ளது. சர்ச்சைக்குரிய அந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், தேவைப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். வீடியோவில் டிரம்ப் மோடியைப் புகழ்ந்து பேசினாலும், அவரது சில குறிப்பிட்ட வார்த்தைகள் அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.