முஸ்லிம் கடைக்காரருக்கு ஆதரவளித்த தீபக்கிற்கு கொலை மிரட்டல், ராகுல் காந்தி நேரில் ஆதரவு

உத்தரகாண்ட் மாநிலம் கோட்வாரில் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ‘பாபா ஸ்கூல் டிரஸ்’ என்ற முஸ்லிம் நபருக்கு சொந்தமான கடையின் பெயர் தொடர்பாக சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரத்தில் கடைக்காரருக்கு ஆதரவாக நின்ற தீபக் குமார் என்பவருக்கு தற்போது கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. சமூக நல்லிணக்கத்திற்காக குரல் கொடுத்த தீபக்கிற்கு எதிராக உள்ளூர் மட்டத்தில் எதிர்ப்புகள் வலுத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தீபக் குமாருக்கு தைரியம் அளிக்கும் வகையில் ராகுல் காந்தி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பயப்படாதீர்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இன்றைய சமூகத்திற்கு தீபக் போன்ற துணிச்சலான மனிதர்கள் அதிகம் தேவை என்று பாராட்டிய ராகுல், அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம் என்றும் அவருக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.