முழு நேர டிஜிபி நியமனத்தில் தாமதம், தேர்தல் ஆணையத்தின் அதிரடி பிளான்

தமிழகத்தில் டிஜிபி சங்கர் ஜீவால் ஓய்வு பெற்ற பிறகு, முழு நேர டிஜிபியை நியமிக்காமல் தமிழக அரசு காலதாமதம் செய்து வருகிறது. தற்போது பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு ஒரு வாரத்திற்குள் தகுதியானவர்கள் பட்டியலை வழங்க உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த மெத்தனப்போக்கை தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நிர்வாகம் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும் என்பதால், ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டத்தில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. குறிப்பாக, பொறுப்பு டிஜிபியை மாற்றிவிட்டு, சட்டரீதியாக தகுதியுள்ள ஒரு அதிகாரியை முழு நேர டிஜிபியாக நியமிக்க டெல்லி தரப்பில் ஆலோசனைகள் நடக்கின்றன. தேர்தல் நேரத்தில் ஒரு ‘மாஸ்டர்மைண்ட்’ அதிகாரியை களமிறக்க ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.