மாதந்தோறும் பிஎஃப் பிடித்தம் செய்தும் உங்களுக்கு பென்ஷன் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதா

இபிஎஃப்ஓ அமைப்பின் கீழ் உள்ள சந்தாதாரர்கள் பிஎஃப், ஓய்வூதியம் மற்றும் காப்பீடு ஆகிய மூன்று முக்கிய சமூக பாதுகாப்பு திட்டங்களின் பலன்களைப் பெறுகிறார்கள். ஒரு நிறுவனமானது ஊழியரின் பெயரில் ஒவ்வொரு மாதமும் பிஎஃப் கணக்கில் செலுத்தும் ۱۲ சதவீத பங்களிப்பில், ۸.৩৩ சதவீதம் நேரடியாக ஓய்வூதிய நிதிக்குச் செல்கிறது. பணியாளர்கள் தங்கள் பணிக்காலத்தில் சேமிக்கும் இந்த நிதியிலிருந்தே பின்னாளில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு ஒரு முக்கியமான நிபந்தனையை ஊழியர்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். ஒருவர் எத்தனை முறை வேலை மாறினாலும், குறைந்தபட்சம் ۱۰ ஆண்டுகள் தொடர்ந்து ஓய்வூதிய நிதியில் பங்களிப்பைச் செலுத்த வேண்டியது அவசியமாகும். இந்த ১০ ஆண்டு கால தொடர்ச்சி இல்லையெனில், சம்பந்தப்பட்ட ஊழியர் ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான தகுதியை இழக்க நேரிடும் என்று விதிமுறைகள் கூறுகின்றன.