மலம் கழித்த பிறகும் வயிறு உப்பசமாக உள்ளதா? ஹார்வர்ட் மருத்துவர் கூறும் எளிய தீர்வுகள்

செய்தி பிரிவு : மலம் கழித்த பிறகும் வயிறு கனமாக இருப்பது அல்லது அடிக்கடி கேஸ் தொல்லை ஏற்படுவது ‘ஐபிஎஸ்’ (IBS) பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். இந்த செரிமான கோளாறுகளைச் சரிசெய்ய ஹார்வர்ட் நிபுணர் மருத்துவர் சௌரப் சேத்தி 10 இயற்கை வழிகளைப் பரிந்துரைத்துள்ளார். இஞ்சி பொடி கலந்த நீர், புதினா தேநீர் மற்றும் கெமோமில் தேநீர் ஆகியவை குடல் தசைகளைத் தளர்த்தி செரிமானத்தை எளிதாக்குகின்றன. ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம் போன்ற நார்ச்சத்துமிக்க உணவுகள் குடலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகின்றன.
உடல் ஆரோக்கியத்தைப் பேண தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது, உடற்பயிற்சி மற்றும் போதிய உறக்கம் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். காஃபின் மற்றும் மதுபானங்களைத் தவிர்ப்பது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மருந்துகளை நாடுவதற்கு முன்பு, இத்தகைய வாழ்வியல் மாற்றங்கள் செரிமான மண்டலத்தைச் சுத்திகரித்து வயிற்று உபாதைகளிலிருந்து நிரந்தர நிவாரணம் அளிக்க உதவும் என்று மருத்துவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.