மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் காலிதா ஜியா
December 28, 2025

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிறுநீரகச் செயல்பாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மருத்துவக் குழுவின் உறுப்பினரும் பிஎன்பி கட்சியின் மூத்த நிர்வாகியுமான டாக்டர் ஏ.இசட்.எம் ஜாஹித் ஹொசைன் கூறுகையில், காலிதா ஜியாவின் நிலைமை மிகவும் சிக்கலாக இருப்பதாகவும், அவர் தற்போது மிக இக்கட்டான நிலையில் இருப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது மகன் தாரிக் ரஹ்மான் வருகைக்குப் பிறகு இந்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.