மனைவி கணவரிடம் சொல்லாத அந்த 5 ரகசியங்கள் இதோ உங்கள் பார்வைக்கு

திருமண உறவில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்றாலும் பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவரிடம் சில விஷயங்களை ரகசியமாக வைப்பதையே விரும்புகிறார்கள். குறிப்பாக பெண்கள் தங்களின் முதல் காதல் மற்றும் அது குறித்த நினைவுகளை ஒருபோதும் கணவருடன் பகிர்ந்து கொள்வதில்லை. அதுமட்டுமின்றி குடும்பத்தில் சண்டையை தவிர்க்க கணவரின் சில முடிவுகளில் விருப்பம் இல்லாவிட்டாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக சம்மதம் தெரிவித்து விடுவார்கள்.
தங்கள் உடல்நிலை சரியில்லை என்றாலும் கணவர் கவலைப்படுவார் என்பதற்காக அந்த வலியையும் வேதனையையும் பெண்கள் மறைப்பது வழக்கம். அதேபோல் வீட்டுச் செலவிற்காக கணவர் கொடுக்கும் பணத்தில் ஒரு பகுதியை சேமித்து வைப்பதையும் தங்கள் வங்கி கணக்கு விவரங்களையும் அவர்கள் ரகசியமாகவே வைத்திருப்பார்கள். இந்த சேமிப்பு பெரும்பாலும் குடும்பத்தின் இக்கட்டான பொருளாதார சூழ்நிலைகளில் உதவியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செய்யப்படுகிறது.