மத்திய பட்ஜெட்டில் மேற்கு வங்கத்திற்கு காத்திருக்கும் மெகா அறிவிப்புகள்
February 1, 2026

மேற்கு வங்கத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பீகார் தேர்தலுக்கு முன்னதாக அந்த மாநிலத்திற்கு வாரி வழங்கப்பட்ட சலுகைகளை போல, இந்த முறையும் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் வங்காளத்திற்கு சிறப்பு அறிவிப்புகள் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வங்காளத்தில் வெற்றி பெற பாஜக தீவிரமாக களம் இறங்கியுள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில் தேர்தல் நோக்கம் கொண்ட திட்டங்கள் பிரதிபலிக்க வாய்ப்புள்ளது. பீகாரைப் போலவே மேற்கு வங்கத்திற்கும் தாராளமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என்பதை அறிய ஒட்டுமொத்த தேசமும் ஆவலுடன் காத்திருக்கிறது.