மத்திய அரசு அதிரடி நடவடிக்கையால் நாட்டில் சமையல் எரிவாயு உற்பத்தி 10 சதவீதம் உயர்வு
March 10, 2026

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் நாட்டில் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. வணிக ரீதியான சிலிண்டர் விநியோகத்தை சீராக வைத்திருக்க, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தியை 10 சதவீதம் அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் முழு திறனுடன் இயங்கி வருகின்றன.
பிரதமர் மோடியின் உயர்மட்ட ஆலோசனையைத் தொடர்ந்து, உள்நாட்டு எரிவாயு ஒதுக்கீட்டில் எல்பிஜி உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யும் பொறுப்பை கெயில் (GAIL) நிறுவனம் ஏற்றுள்ளது. எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான இறக்குமதி மாற்று வழிகளையும் அரசாங்கம் தயார் நிலையில் வைத்துள்ளது.