பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் முக்கிய அறிவிப்பு

பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் முக்கிய அறிவிப்பு

ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டு பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவியதால், சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். இந்த தேவையற்ற பதற்றத்தால் பல இடங்களில் வாகன வரிசைகள் நீண்ட காணப்படுகின்றன.

பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் இந்தியன் ஆயில் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. நாடு முழுவதும் போதுமான அளவு எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், விநியோகம் சீராக நடைபெற்று வருவதாகவும் நிறுவனம் உறுதிப்படக் கூறியுள்ளது. எனவே வதந்திகளைப் புறக்கணித்து, பங்குகளில் தேவையற்ற அவசரத்தைத் தவிர்க்குமாறு வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *