புதுச்சேரி பெட்ரோல் பங்குகளில் நள்ளிரவு முதல் குவியும் மக்கள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு வதந்தியால் பதற்றம்

புதுச்சேரி பெட்ரோல் பங்குகளில் நள்ளிரவு முதல் குவியும் மக்கள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு வதந்தியால் பதற்றம்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்தி புதுச்சேரியில் காட்டுத்தீயாய் பரவியுள்ளது. இதனால் வில்லியனூர் மற்றும் அரும்பாத்தபுரம் பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நள்ளிரவு முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பொதுமக்கள் வாகனங்கள் மட்டுமின்றி, 25 லிட்டர் தண்ணீர் கேன்களிலும் பெட்ரோலை வாங்கிச் செல்கின்றனர்.

இதற்கிடையில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் சுமார் 750 உணவகங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. இருப்பினும், வீட்டு உபயோக சிலிண்டர் வழங்க எந்த தடையும் இல்லை என அரசு விளக்கம் அளித்துள்ளது. வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *