புதின் இல்லம் மீதான தாக்குதல் முயற்சி டொனால்ட் டிரம்ப் கடும் அதிருப்தி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இல்லத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதினிடம் இருந்து இந்த விபரத்தைக் கேட்டறிந்த டிரம்ப், இத்தகைய செயல்கள் தமக்கு சற்றும் விருப்பமில்லை என்றும், இது தவறான அணுகுமுறை என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தால் தான் மிகவும் கோபமடைந்ததாக அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும் ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டுகளை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முற்றிலுமாக மறுத்துள்ளார். ரஷ்யா முன்வைக்கும் புகார்கள் உண்மையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். ஒருபுறம் அமைதி பேச்சுவார்த்தை குறித்த எதிர்பார்ப்புகள் நிலவும் சூழலில், டிரம்பின் இந்த காட்டமான கருத்துக்கள் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.