பிரேசிலின் இந்த அழகிய நகரத்தில் திருமணத்திற்கு ஆண்கள் கிடைக்காமல் தவிக்கும் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள்

பிரேசிலின் இந்த அழகிய நகரத்தில் திருமணத்திற்கு ஆண்கள் கிடைக்காமல் தவிக்கும் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள்

பிரேசிலில் உள்ள நொய்வா என்ற ஒரு விசித்திரமான நகரத்தில் வசிக்கும் பெண்கள் தங்களுக்கு ஏற்ற வரன் கிடைக்காமல் பெரும் தவிப்பில் உள்ளனர். 20 முதல் 35 வயதுடைய சுமார் 600 அழகிய இளம் பெண்கள் இந்த ஊரில் வசித்து வருகின்றனர். இருப்பினும், இந்த நகரத்தில் ஆண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால், பல ஆண்டுகளாக இவர்கள் திருமணம் ஆகாமல் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள ஆண்கள் பெரும்பாலானோர் வேலை தேடி வெளி நகரங்களுக்குச் சென்று விடுவதால், இந்த நகரம் முழுமையாக பெண்களின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகிறது.

இந்த பெண்கள் திருமணத்திற்குப் பிறகு தங்கள் ஊரை விட்டு வெளியேற மறுப்பதுதான் இவர்களுக்கு வரன் கிடைக்காமல் போவதற்கு முக்கிய காரணமாகும். இவர்கள் தங்களுக்கு வரப்போகும் கணவர் திருமணத்திற்குப் பின் இதே ஊரில் தங்கி தங்களுக்கு உதவ வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றனர். இதனால் வெளியூர் ஆண்கள் இங்கு வந்து குடியேற தயக்கம் காட்டுகின்றனர். வசீகரமான அழகு இருந்தும், இந்த ஒரு பிடிவாதமான நிபந்தனையால் பல நூறு இளம் பெண்களின் திருமண கனவு நனவாகாமல் நீண்ட நாட்களாகத் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *